தப்பி பிரான்சுக்கு வந்த நிலையில் 7 பெண்கள் சவுதி இளவரசர் மீது புகார்- விசாரிக்கும் பொலிசார் என்ன நடக்க போகிறது ?

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 7 பணிப்பெண்கள் பிரான்ஸ் பாரிஸ் காவல்துறை அதிகாரிகளிடம் சவுதி இளவரசர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளனர். அவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை. பணிப்பெண்கள் அளித்துள்ள புகாரில் அவர்கள் சவுதி நாட்டில் உள்ள ஒரு இளவரசர் வீட்டில் பணி செய்து வருவதாகவும் கோடை விடுமுறைக்காக இளவசர் பிரான்சுக்கு அழைத்து வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாங்கள் பல ஆண்டுகளாக இளவரசர் வீட்டில் பணிபுரிந்து வருகிறோம் என்றும் எங்களுக்கு 24 மணி நேரமும் வேலை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சரியான உணவு அளிக்கப்படாது என்றும் அவர்கள் உண்ட மிச்ச உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகிறோம். மேலும் தங்களின் மாத வருமானம் 300 யூரோக்கள் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் பிரான்ஸ் அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Contact Us