திருமணமான பெண்களை மயக்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காதல் மன்னன்!! சிக்கியது எப்படி?

திருமணமாக பெண்களுக்கு காதல் வலைவீசி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 31), வேலை தேடி தெலுங்கானாவுக்கு வந்துள்ளார்.

அங்கு லாலகுடாவில் வேலை தேடி அலைந்த போது, எந்த வேலையும் கிடைக்கவில்லை, இதில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணின் தொடர்பு கிடைத்துள்ளது.

அடிக்கடி அவருடன் பேசி நட்பாக பழகியுள்ளார், தொடர்ந்து அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு பணமும் பறித்துள்ளார்.

ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த பெண், ரங்காசமி குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், ரங்கசாமி வேறொரு பெண்ணுடன் பழகியது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து ரங்கசாமியை கைது செய்து விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சரியான வேலை கிடைக்காததால் விரக்தியடைந்த ரங்கசாமி சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருமணமான அதிக சம்பளத்தில் வேலை பார்க்கும் பெண்களை குறிவைத்துள்ளார்.

அவர்களிடம் முதலில் நட்பாக பேசி வீட்டில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொண்டு ஆதரவாக இருப்பதுபோல் காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

அவ்வாறு சிக்கும் பெண்களிடம் உல்லாசமாக இருந்ததோடு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக, கணவன்-மனைவி இடையே பிரச்னைகளை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இதில் சிலர் தனது கணவரை விவாகரத்தும் செய்துள்ளனர். தன்னுடைய ஆசை தீர்ந்த பிறகு, பணத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டு வேறு பெண்ணிற்கு வலை வீசுவதையே தனது பொழுது போக்காக வைத்துள்ளார்.

பல பெண்களிடம் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளார். போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Contact Us