வரும் திங்கள் Extrs Bank Holidayயா ? பொறிஸ் ஜோன்சன் திட்டம் 3 லட்சம் பேர் கையெழுத்து

வரும் ஞாயிறு அன்று, யூரோ2020 உதைபந்தாட்ட போட்டியில், இறுதியாக இத்தாலி மற்றும் பிரித்தானியா மோதவுள்ளது. இதனை அடுத்து திங்கட் கிழமை வங்கி விடுமுறையாக அறிவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு. சுமார் 3 லட்சம் பேர் கையெழுத்திட்டு பொறிஸ் ஜோன்சனுக்கு அனுப்பி வருகிறார்கள். வரும் ஞாயிறு அன்று, பிரித்தானியா வெல்லும் என்று அந்த அளவு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதேவேளை பிரித்தானியா வீரர்கள் அனைவரும் வீட்டுக்கு செல்லவில்லை. மனைவி பிள்ளை குட்டிகளை பார்கவும் இல்லை. வேறு எந்த வெளி ஆட்களோடும் பழகாமல் தனிமையில் இருந்து வருகிறார்கள். இந்த ஞாயிற்றுக் கிழமைக்கு பின்னரே அவர்கள், தமது குடும்பத்தோடு இணைவார்கள். இந்த நிலையில்…

பிரித்தானியா வெல்லுமேயானால், ஜூலை 19க்கு பிறகு வரும் ஒரு திங்கட் கிழமையை வங்கி விடுமுறையாக அறிவிப்பது என பொறிஸ் ஜோன்சன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Contact Us