சீனாவில் 250 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடத்திற்கு தடை!

சீனாவில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வானுயர கட்டிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷென்ஜென் நகரில் 300 மீட்டர் உயரத்தில் 71 தளங்களைக் கொண்ட ஷென்ஜென் எலெக்ட்ரானிக்ஸ் குரூப் பிளாசா கடந்த மே மாதம் 18 ஆம் தேதி திடீரென குலுங்கியதையடுத்து அந்த கட்டிடம் மூடப்பட்டது.

இந்நிலையில் பொது பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் 250 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு தடை விதிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 100 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடங்களின் கட்டுமானம் தீயணைப்பு மீட்பு திறனுக்கு உட்பட்டு இருக்கவேண்டும் எனவும், அந்நகரத்தின் கட்டுமான உயர வழிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us