எல்லாருக்கும் 1.1 லட்ச ரூபாய் போனஸ்’… ‘இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல ஐடி நிறுவனம்’… கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!

மிகவும் சவாலான பேரிடர் காலத்தைச் சமாளித்தமைக்காக இந்த தொகை வழங்கப்படுகிறது.

Microsoft Gifting Employees $1,500 USD Pandemic Bonus

உலகம் முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு சுமார் 1.1 லட்ச ரூபாயை போனஸாக டெக்னாலஜி சாம்ராட் நிறுவனமான மைக்ரோசாப்ட் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் சவாலான பேரிடர் காலத்தைச் சமாளித்தமைக்காக இந்த ஊக்கத்தொகையை ஊழியர்களுக்கு வழங்குகிறது மைக்ரோசாப்ட்.

Microsoft Gifting Employees $1,500 USD Pandemic Bonus

இதற்காக சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை மைக்ரோசாப்ட் செலவிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்கள் சிலர் ஊக்கத்தொகை குறித்த மின்னஞ்சல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக உறுதி செய்துள்ளனராம். அதே நேரத்தில் அந்த தொகை எவ்வளவு என்பது அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிகிறது.

Contact Us