தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச Beer!

அவுஸ்திரேலியாவின் Port Melbourne-இலுள்ள Prince Alfred ஹோட்டலுக்கு அருகில் தடுப்பூசி வழங்கும் மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கும் செயன்முறை கடந்த வாரம் குறித்த ஹோட்டல் ஆரம்பித்திருந்தது. ஆனால் மருந்துப்பொருளுடன் தொடர்புடைய சலுகையாக மதுபானத்தை வழங்கமுடியாது என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியமான Therapeutic Goods Administration (TGA) இதற்கு தடைவிதித்தது. இந்த நிலையில் TGA-இன் இத்தீர்மானம் நியாயமானது என்றாலும் தற்போதைய சூழலில் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்பதால் இவ்வாறான ஊக்குவிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை என பிரதமர் Scot Morrison தெரிவித்தார்.

குறித்த சலுகைமீது விதிக்கப்பட்ட தடை தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தடுப்பூசி திட்டத்தில் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவதற்காக Prince Alfred ஹோட்டலுக்கு தனது வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்தார். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கும் சலுகைமீது விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு TGA-இடம் சுகாதார அமைச்சர் Greg Hunt கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley-யும் Prince Alfred ஹோட்டலின் இலவச beer சலுகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும் Victorian Alcohol and Drug Association தலைமை நிர்வாகி Sam Biondo, TGA-இன் தடை மீளப்பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் தனது விமர்சனத்தை பதிவுசெய்துள்ளார்.

Contact Us