கிளிநொச்சியில் அடாவடி ரவுடிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றைய தினம் நள்ளிரவு வேளை 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த ரவுடிக் கும்பல்களை ஊர் மக்கள் விரட்டியடித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனை எதிர்பார்க்காத ரவுடிகள் வாகனங்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.

கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Contact Us