போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்; நாமல் சொல்கிறார்; என்ன நடிப்புடா சாமி!

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த கேள்வி பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடாபில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் நல்லாட்சி அரசாங்கத்திலோ அல்லது தற்போது ஆட்சியில் இருக்கும் கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்திலும் சரி இந்த நடவடிக்கையை தான் என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக உலகமே எதிர்த்துப் போராடிவரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Contact Us