பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்கு… ருசியான ஆம்பூர் பிரியாணி’!.. பின்னணியில் ‘பலே’ திட்டம்!.. குவிந்தது மக்கள் கூட்டம்!

கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஆம்பூர் பிரியாணி கொடுக்கப்பட்டதன் பின்னணியில் வியக்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ambur biriyani in exchange for old damaged rupee notes reason

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடையில், பொதுமக்களிடம் உள்ள பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பிரியாணி விற்கப்படும் என கடை நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்தது.

செல்லாத நிலையில் உள்ள கிழிந்த ரூபாய் நோட்டுகளை வெளிக் கொண்டு வரவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், பழைய ரூபாய் நோட்டுடன் பிரியாணி வாங்க மக்கள் குவிந்தனர். மக்களிடம் உள்ள ஆர்வத்தைக் கண்ட கடை உரிமையாளர் மாதம் ஒருமுறை இதுபோல பிரியாணி விற்பனை செய்ய முன் வந்துள்ளார்.

Contact Us