அரை நிர்வாணம்; பேஸ்புக் பழக்கம்.. வாட்ஸ் அப் சேட் – வீடியோ காலில் வில்லங்கத்தில் சிக்கிய நபர்!

பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி அக்கவுண்ட் ஓப்பன் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை சேர்ந்த 45 வயது நபருக்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார். அவரும் அந்த அழைப்பு ஏற்றுக்கொண்டார். இருவரும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் மெசேஜ் செய்து வந்துள்ளனர் . இதனையடுத்து வாட்ஸ் அப் எண்ணை பகிர்ந்துக்கொண்டு இருவரும் பேசி வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் அந்தப்பெண் மொபைல் எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் இருந்த பெண் ஆபாசமாக வீடியோ சேட் செய்துள்ளார். இவரையும் ஆபாசமாக வீடியோ சேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விபரீதத்தை உணராத இந்த நபர் ஆபாசமாக சுமார் 2 நிமிடம் வீடியோ சேட் செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த மொபைல் எண்ணில் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. இவர் அரைநிர்வாண கோலத்தில் இருந்த ஸ்கீரீன் ஷாட்டுகளை மொபைல் எண்ணுக்கு வந்துள்ளது. ரூ15000 ஆயிரம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன். இல்லை என்றால் இந்த போட்டோக்கள் அனைத்தையும் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த நபர் கூகுள் பே மூலம் 15000 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும் 10000 வேண்டும் என மெசேஜ் வந்துள்ளது.

இதனையடுத்து சைபர் க்ரைமில் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். செல்போன் எண்ணைக்கொண்டு ட்ரேஸ் செய்தனர். இந்த விவகாரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண்களின் பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் செய்து மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அந்த நபருக்கு பெண்கள் யாரும் வீடியோகால் செய்யவில்லை. ஆபாச வீடியோவை ப்ளே செய்து அதன்மூலம் மோசடியில் ஈடுபட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Contact Us