லண்டன் பொலிசார் காரை நிறுத்தி கண்ணை செக் பண்ணுகிறார்கள்- 1,400 பேரின் லைசன்ஸ் காலி…

பிரித்தானியாவில் அதிலும் லண்டனில் பொலிசார் தற்போது கார்களை திடீரென நிறுத்தி, வாகன ஓட்டுனரை வெளியே வரச் சொல்லி 20 மீட்டர் தொலைவில் உள்ள வேறு ஒரு காரின் நம்பர் பிளேட்டை வாசிக்கச் சொல்கிறார்கள். உங்களால் வாசிக்க முடியவில்லை என்றால், அந்த இடத்திலேயே வைத்து, DVLA க்கு அறிவித்து விடுகிறார்கள். இதனால் உங்கள் லைசன்ஸை DVLA கான்சல் செய்து விடும். பின்னர் மீண்டும் அப்பிளை செய்து தான் எடுக்க வேண்டும். அது போக நீங்கள் கண்களை மருத்துவரிடம் காட்டி, அதற்கான சான்றிதழை பெறவேண்டும். மேலும் கண்ணாடி அணியாமல் குத்து மதிப்பாக கார் ஓடும் நபர்களுக்கும், இவ்வாறு லைசன்ஸை காலி செய்கிறது பொலிஸ்… இதனால்..

மீண்டும் அப்பிளை செய்து லைசன்ஸை எடுக்க வேண்டிய நிலைக்கு ஓட்டுனர்கள் தள்ளப்படுகிறார்கள். காரை மறித்த உடனே குடித்திருக்கிறீர்களா என்று இது நாள் வரை கேட்டு வந்த பொலிஸார் தற்போது புது வித பிளானோடு களத்தில் இறங்கியுள்ளார்கள். எனவே ஜாக்கிரதை தழிழர்களே ஜாக்கிரதை. Source : Police referred 1,400 drivers to DVLA because they couldn’t read a number plate from 20 metres – and 97% had licences revoked:

Contact Us