புட்டின் சப் மரீன் கப்பல் வேட்டையாடப்படுகிறது ! கடலுக்கு அடியில் ஸ்பை ட்ரொன்களை இறக்கிய பிரிட்டன் !

மெடிடரேனியன் கடல் பரப்பில் தற்போது நிலை கொண்டுள்ள, பிரித்தானிய கடல் படை கப்பலான குவீன் எலிசபெத்தை ரஷ்ய நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று பல நாட்களாக பின் தொடர்ந்து வருகிறது. இதனை கண்டறிய பிரித்தானிய விமானப்படை ஹெலி ஸ்நோ -பொயஸ் என்ன்ற கடலுக்கு அடியில் செல்லும் ட்ரொன்களை கடலில் இறக்கியுள்ளது. இவை கடல் பரப்பில் வீழ்ந்த மறு நிமிடமே கடல் பரப்பில்,  அங்கே தனக்கென ஒரு நிலையை எடுத்து விடும். அங்கே இருந்து, வேவு பார்த்து எதிரியின் நீர் மூழ்கிக் கப்பலை கண்காணித்து தனது எஜமானுக்கு அனுப்பும். இதனை கடலில் விதைத்து வருகிறது பிரித்தானியா.

இன் நிலையில் ரஷ்ய நீர் மூழ்கிக் கப்பல் ஏன் பிரித்தானிய போர் கப்பலின் நடமாட்டத்தை தொடர்ந்து அவதானித்து வருகிறது என்பது மிகவும் சந்தேகமான மற்றும் அதிர்ச்சி தரும் விடையமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

Contact Us