கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்…. இழுத்துச் சென்ற கரடி…. தேடுதல் பணியில் வனத்துறையினர்

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் நர்ஸ் லியா லோகன்(65). இவர் தனது தோழி மற்றும் சகோதரியுடன்  மொன்டானா மாகாணத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை இரவு ஓவாண்டே நகரில் 3 பேரும் தனித்தனி கூடாரத்தில் ஓய்வு எடுத்துள்ளனர். இந்த சமயத்தில் நள்ளிரவில் அப்பகுதியில் உள்ள கரடி ஒன்று கூடாரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த லியாவை இழுத்துச் சென்று கடித்து குதறியது.

இதனை அடுத்து லியாவின் கதறல் சத்தம் கேட்டு அவரது தோழி மற்றும் சகோதரி ஓடிச்சென்று அவரை மீட்பதற்காக அருகிலிருந்த பொருள்களை கரடி மீது வீசி அதனை விரட்டியுள்ளனர். ஆனால் அதற்குள் லியா இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதனையடுத்து லியாவின் தோழி மற்றும் சகோதரி அவரை  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த கரடியை கொல்வதற்காக  தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது லியாவின் தோழி மற்றும் சகோதரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us