2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால்… இத்தனை பெரிய தண்டனையா’?.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு உத்தர பிரதேச அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

uttar pradesh govt proposes bill for violating 2 child norm

உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவின் படி, உத்தரபிரதேசத்தில் 2 குழந்தைக் கொள்கையை மீறும் எவரும், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்தும் தடை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநில சட்ட ஆணையம் (யுபிஎஸ்எல்சி)  இணையத்தளத்தில் வரைவு மசோதா குறித்து கூறி இருப்பதாவது, மாநில சட்ட ஆணையம், உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை தயாரித்துள்ளது.

வரைவு மசோதாவை மேம்படுத்த பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் கேட்கப்படுகின்ற, அதற்கான கடைசி தேதி ஜூலை 19 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு முழு சேவையின் போது இரண்டு கூடுதல் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். மகப்பேறு அல்லது விடுப்பு 12 மாதங்கள், முழு சம்பளத்துடன் கூடிய அலவனஸ் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலாளியின் பங்களிப்பு நிதியில் மூன்று சதவீதம் அதிகரிக்கும் என்றும், ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரைவு மசோதா அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மகப்பேறு மையங்கள் நிறுவப்படும் என்று கூறுகிறது. இந்த மையங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவற்றை விநியோகிக்கும். சமூக சுகாதார பணியாளர்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதோடு, மாநிலம் முழுவதும் கர்ப்பம், பிரசவம், பிறப்பு மற்றும் இறப்புகளை கட்டாயமாக பதிவு செய்வதை உறுதி செய்யும்.

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Contact Us