யாழ் குடாநாட்டில் வீடு புகுந்து பாலியல் துன்புறுத்தல்; பெரும் பரபரப்பு!

தனிமையில் வாழ்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை, சட்டத்துக்குப் புறம்பான வன்புணர்வு மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 30 வயதுடைய நபர் ஒருவர் வல்வெட்டித் துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி வீடு புகுந்த 30 வயதுடைய நபர், வீட்டில் தனிமையில் வாழ்ந்த 35 வயதுடைய பெண்ணை வன்புணர்ந்துள்ளார்.

Contact Us