ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான பெரும் சோகம்!

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டம் பிஜாவர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் லக்‌ஷ்மண் அஹிர்வார். இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கியுள்ளார். தொட்டிக்குள் வெளிச்சம் தெரிவதற்காக மின்சார லைட் பயன்படுத்தியுள்ளார்.

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் லக்‌ஷ்மண் அஹிர்வார் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பார்த்த குடும்ப நபர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அப்போது மேலும் ஒருவர் பின் ஒருவராக மின்சாரம் தாக்கப்பட்டு 5 உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் காயத்துடன் உயிர்பிழைத்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Contact Us