யூனிட்டி -22 விண்கலத்தில் விண்வெளி புறப்பட்ட மனிதர்கள்- ரிச்சர்ட் பிரான்ஸன் உள்பட 5 பேர் கொண்ட குழு சென்றது!

அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விஎஸ்எஸ்யூனிட்டி விண்கலம் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள் புறப்பட்டுச்சென்றனர். நியூ மெக்சிகோவிலிருந்து இந்த பயணம் தொடங்கியது. இதில் வர்ஜின் கேலக்டிக் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன், இந்திய வம்சாவளி பெண் சிரிஷா பந்த்லா (34) உட்பட 5 பேர் கொண்ட குழு சென்றது.

உள்ளூர் நேரப்படி காலை 8.40 மணிக்க்கு நியூமெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து விண்கலம் புறப்பட்டது. செங்குத்தாக டேக் ஆப் செய்து விஎஸ்எஸ்யூனிட்டி விண்கலம் புறப்பட்டது. ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட இரட்டை விமானம் 50 ஆயிரம் அடி சென்றதும் யூனிட்டி 22-விண்கலம் விடுவிக்கப்படும். யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத்தொடங்கி விண்வெளிக்கு செல்லும்.

Contact Us