பிரபல அறிவிப்பாளினி மருத்துவமனையில் அனுமதி

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் அறிவிப்பாளினியாக பணி புரியும் ,எல்லோரையும் கவரத்தக்க வகையில் பேசும் அர்ச்சனா அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக பங்கு பற்றியிருந்தார்.

தற்போது இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக ,தானே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் அர்ச்சனா. இதன் காரணமாக,சில சமயங்களில் என்னால் பலரின் அழைப்புக்களை எடுத்து பேச முடியாமல் போகலாம்.என் உடல் நலம் தொடர்பான அனைத்து  விடயங்களையும் எனது மகள் சாரா உங்களுக்கு அப்டேட் செய்வார் ,அத்துடன் கட்டாயமாக இந்த அறுவை சிகிச்சை பரீட்சையிலிருந்து வெற்றி பெற்று சீக்கிரம் வருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் சகல ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதுடன்,அர்ச்சனாவுக்காக பலரும் பிரார்த்தித்து வருகின்றார்கள்.

Contact Us