புகழின் உண்மையான முகமே இதுதான்: வனிதா அவிழ்த்துவிட்ட உண்மைகள்

 

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய குக்வித்கோமாளி நிகழ்ச்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாகும்.

சமையல் கலந்த நகைச்சுவை என்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம், இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு இருந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்தது கோமாளி புகழ் தான்.

இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

தற்போது கூட குக்கு வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் இவருடன் ஜோடி சேர நிறைய பெண்கள் அதில் போட்டிபோட்டனர்.

அதை தொடர்ந்து புகழுக்கு எதிராக சிலர், சமூகவலைத்தளங்களில் தங்களின் கருத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வனிதா காணொளி ஒன்றினை பதிவிட்டு புகழின் உண்மையான முகத்தினை வெளிச்சமிட்டுள்ளார்.

காணொளியில் புகழ் உண்மையிலேயே ஒரு ஜென்டில் மேன் தான்… இதெல்லாம் கண்டெண்ட்டிற்காக புகழ் இவ்வாறு பெண்களை டாவ் அடிக்கிற மாதிரி இருக்கின்றார்… ஆனால் அவருக்கு பின்னே சென்று பார்த்தால் இந்த மாதிரி எந்தவொரு செயலும் இல்லாமல் அவரது வேலையை மட்டுமே செய்து வருவார் என்று வனிதா கூறியுள்ளார்

Contact Us