பாலின சமத்துவம் கோரி ஜேர்மனியில் மேலாடையின்றி சைக்கிள் பேரணி!

ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் பாலின உரிமைகள் சமத்துவத்தை கோரி, நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இன்று மேலாடையற்ற சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.  நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மேலாடைகளின்றி பேரணியில் ஈடுபட்டனர். பிரெஞ்சு பெண்ணான கப்ரியல் லெபிரெட்டன் கடந்த மாதம் பெர்லின் தடாகமொன்றிலிருந்து பொலிசாரால் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரெஞ்சுப் பெண் தனது ஆண் நண்பர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தடாகத்திற்கு சென்றிருந்தார். பொலிசார் அவரது மார்பை மறைக்கும்படி கூறியிருந்தனர். எனினும், அந்த பெண் மறுத்துள்ளார். ஆண்கள் மேலாடையின்றி சுதந்திரமாக திரிய அணுமதிக்கப்பட்டுள்ள போது, பெண்கள் மட்டும் ஏன் மேலாடை அணிய வேண்டுமென கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து, அவர் தடாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மேலாடை அணியவில்லை. மார்புகளை சுதந்திரமாக விடு, எனது உடல் எனது தெரிவு என்ற வாசகங்களை உடலில் எழுதியிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மார்புக்கச்சை அணிந்திருந்தனர்.

ஜேர்மனியில் நிர்வாணமாக திரிவது அனுமதிக்கப்படாது. ஆனால் உடல் ஓவியம் அல்லது மார்பு காம்புகளை மறைக்கும் ஏற்பாடுகளுடன் நடமாடலாம்.

இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை’ ப்ரா, பிகினி அல்லது முலைக்காம்பு ‘போம் பாம்ஸ்’ அணிய பொலிசார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் அதை செவிமடுக்கவில்லை.

 

Contact Us