சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுபாடு; வெளிநாட்டு விரோதத்தை எதிர்கொள்ள இணைந்த சீனா, வடகொரியா உறுதி!

வடகொரியாவுடன் சீனா நட்புறவு
அணு ஆயுத விவகாரத்தில் கிழக்கு ஆசிய நாடான வட கொரியா மீது உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், சீனா வடகொரியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. வடகொரியாவின் ஒரே ஒரு மற்றும் முக்கிய வர்த்தக கூட்டாளியாக சீனா இருந்து வருகிறது.1930-களில் வடகிழக்கு சீனாவில் ஜப்பானிய காலனித்துவவாதிகளுக்கு எதிராக, சீன ராணுவ வீரர்களுடன் இணைந்து வடகொரியாவின் கொரில்லா படைகள் சண்டையிட்டன. இதில் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட நட்புறவு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. 1950 முதல் 1953 வரை நடந்த கொடிய

போரில் சீனா வட கொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டது.

வெளிநாட்டு விரோதத்தை எதிர்கொள்ள…
இந்த சூழலில் கடந்த 1961-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி வட கொரியா மற்றும் சீனா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி சீனா அல்லது வட கொரியா தாக்குதலுக்கு உள்ளானால் ஒருவருக்கொருவர் உடனடி ராணுவ மற்றும் பிற உதவிகளை வழங்க இரு நாடுகளும் உறுதி பூண்டன.இந்த நிலையில் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பர வாழ்த்துக்களை பரிமாறி‌ கொண்டனர். அப்போது வெளிநாட்டு விரோதத்தை எதிர்கொள்ள இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதி பூண்டனர்.‌

அரசாங்கத்தின் நிலையான நிலைப்பாடு
சீன அதிபர் ஜின்பிங்குக்கு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அனுப்பிய செய்தியில், “இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் கூட்டுறவு உறவுகளை இடைவிடாமல் வளர்ப்பது எனது அரசாங்கத்தின் நிலையான நிலைப்பாடு. இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை இரு நாடுகளின் சோசலிச காரணத்தை பாதுகாப்பதிலும் முன்னெடுப்பதிலும் அதன் வலுவான உயிர் சக்தியை காட்டுகிறது. தற்போது விரோத சக்திகள் தங்கள் சவால் மற்றும் தடை செய்யும் நடவடிக்கைகளில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றன. இதனை எதிர்கொள்ள இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது அவசியம்” என
குறிப்பிட்டார்.

அதைப்போல் கிம் ஜாங் அன்னுக்கு ஜின்பிங் அனுப்பிய செய்தியில், “வட கொரியா மற்றும் சீன மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்க தயாராக உள்ளேன். சீனா வடகொரியா உறவுகளின் முன்னேற்றத்தை சரியான திசையில் கொண்டு செல்ல விரும்புகிறேன். கிம் உடனான மூலோபாய தகவல் தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலமும், நட்பு மற்றும் ஒத்துழைப்பின் உறவுகளை சீராக வழிநடத்துவதன் மூலமும் இரு நாட்டு உறவை புதிய தளத்துக்கு கொண்டு செல்வதில் உறுதியாக இருக்கிறேன்” என தெரிவித்தார்.

Contact Us