11 ஆண்டுகளுக்கு பின் ‘திருத்தி’ எழுதப்பட்ட வரலாறு.. இங்கிலாந்து மண்ணில் ‘கெத்து’ காட்டிய நம்ம அஸ்வின்..!

இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அசத்தி வருகிறார்.

Ashwin achieves huge milestone in first County game for Surrey

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளதால், இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்கள், குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

Ashwin achieves huge milestone in first County game for Surrey

Ashwin achieves huge milestone in first County game for Surrey

பொதுவாக ஆஸ்திரேலிய மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆட்டத்தின் முதல் ஓவர் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே கொடுக்கப்படும். ஆனால் இந்தமுறை போட்டியின் முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு கொடுக்கப்பட்டது.

Ashwin achieves huge milestone in first County game for Surrey

11 ஆண்டுகளுக்கு பிறகு கவுண்டி கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் முதல் ஓவரை வீசுவது இதுதான் முதல்முறை. கடந்த 2010-ம் ஆண்டு சுழற்பந்து வீச்சாளர் ஜீதன் படேல் வீசியிருந்தார். அதன்பிறகு அஸ்வின்தான் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், சோமர்செட் (Somerset) அணி வீரர் டாம் லம்மோன்பியை கிளீன் போல்டாக்கி அஸ்வின் அசத்தினார். கேப்டன் ஜேம்ஸ் ஹில்ட்ரெத்துடன் ஜோடி சேர்ந்து நங்கூரமாய் நின்ற லம்மோன்பி, நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்த கூட்டணியை பிரிக்க நீண்ட நேரமாக சர்ரே அணி போராடி வந்தது. அப்போது அஸ்வின், டாம் லம்மோன்பியை அவுட்டாக்கியது ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Contact Us