ஐயோ தோத்துட்டாங்களே’… ‘கதறி அழுத நட்சத்திர வீரரின் மனைவி’… அழுகையை நிறுத்த வீரர் செய்த டெக்நிக்!

யூரோ கால்பந்து 2020 இறுதிப்போட்டியில் இங்கிலாந்து தோற்றதால் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

Harry Kane comforts heartbroken wife Katie after she bursts into tears

லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை இத்தாலி வீழ்த்தி சாம்பியன் ஆனது. இங்கிலாந்தின் தோல்வி அந்நாட்டின் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேனின் மனைவி கேட் மைதானத்திலேயே தோல்வியை தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

Harry Kane comforts heartbroken wife Katie after she bursts into tears

இதைப் பார்த்து பலரும் நெகிழ்ந்து போன நிலையில், இங்கிலாந்து வீரர் ஹாரி தனது மனைவியைக் கட்டியணைத்து ஆறுதல் படுத்தினார். ஆனாலும் அவர் தனது அழுகையை நிறுத்தவில்லை. இதையடுத்து மனைவிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து சிறிது ஆசுவாசப்படுத்தினார்.

Harry Kane comforts heartbroken wife Katie after she bursts into tears

இருப்பினும் கேட்-டால் சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து கைகளால் முகத்தை மூடி அழுதபடி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது

Contact Us