என்ன இது…! ‘டிவி, ஃப்ரிட்ஜ்-ல இருந்து புகையா வருது…’ ‘அடுத்தடுத்த வீடுகளிலும் வந்துருக்கு…’ ஏன் எல்லா வீட்லையும் இப்படி ஆகுது…? – ‘அதிர்ச்சியில்’ அனைத்தையும் ‘தெருவில்’ வைத்த பொதுமக்கள்…’

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோடங்குடி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து டிவி, மிக்சி மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது.

electrical appliances were damaged due to high voltage

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறி உடனடியாக மின்வாரியத்திற்கும் போலீசாருக்கும் புகார் அளித்துள்ளனர். அதோடு அங்கிருந்த சிலரின் வீட்டில் இருக்கும் டிவி, மிக்ஸி வெடித்து விட்டது எனக் கூறி அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு தெருவில் வைத்துள்ளனர்.

அப்போது அப்பகுதி மின்கம்பங்களில் உயர் மின் அழுத்தம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்தது.

மேலும் இனி வருங்காலங்களில் உயர் மின் அழுத்தம் ஏற்படாத வகையில் மின்சார வயர்களை சரி செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கூறும் அக்கிராம மக்கள், உயர் மின் அழுத்த பிரச்சனை என்பது கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக தங்கள் கிராமத்தில் இருப்பதாகவும் அவ்வப்போது இதுபோல் மின்சார உபயோகம் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து வருவதாகவும் இதனால் பெருமளவு பிரச்சனைகளை சமாளித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

Contact Us