மாங்குளம் காட்டுக்குள் காணாமல் போன சிறுவன்!! பேய் மீது சந்தேகமாம்!!

மாங்குளம் – துணுக்காய் வீதி, உதயசூரியன் நகர் பகுதியில்,10ம் திகதி இரவு, காணாமல் போயிருந்த 14 வயது சிறுவன், நேற்று வீடு திரும்பியுள்ளார். இது குறித்து கருத்துரைத்த சிறுவன், தான் குளிக்க சென்றவேளை யாரோ தன்னை கூப்பிட்டது போல இருந்ததாகவும் அதனால், தான் காட்டுக்குள் சென்று விட்டதாகவும் கூறினார். இதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அதன் பின்னர், கொக்காவில் காட்டுப்பகுதியில் வெளியேறினேன்.

மேலும், என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. எவ்வாறு காட்டிற்குள் சென்றேன் என்றும் தெரியாது’ என்றும் சிறுவன் கூறினார். குறித்த காட்டுப்பகுதியில் காட்டு பேய் இருப்பதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us