15000 அடி உயரத்திலிருந்து வீட்டின் கூரையில் விழுந்த வீரர்.. என்ன நடந்தது..? அதிர்ச்சி சம்பவம்..!!

பிரிட்டன் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பேராஷூட் திறக்கவில்லை. எனவே சுமார் 15,000 அடி உயரத்திலிருந்து குதித்து விட்டார். வழக்கமாக பகை நாட்டு பிராந்தியங்களில் ரகசியமாக ஊடுருவ ராணுவ வீரர்கள் இத்திட்டத்தை கையாள்வார்கள். எனினும் இவர் பேராஷூட் திறக்காததால் மாட்டிக்கொண்டார்.

எனவே கலிபோர்னியாவில் இருக்கும் Atascadero என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பின் மேல் விழுந்துவிட்டார். மேலும் கூரையை உடைத்துக்கொண்டு சமையலறையில் விழுந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக அவசர உதவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீட்டின் உரிமையாளர் அப்போது வீட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு அவசர உதவி குழுவினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Contact Us