காப்புலியால் தோற்றோம் என்று பழித்த வெள்ளையர்கள்- ஆனால் மார்கஸ்சுக்கு குவியும் ஆதரவு !

நேற்று முன் தினம் நடைபெற்ற யூரோ 2020 உதைபந்தாட்ட போட்டியில், இறுதியில் பெனால்டி அடித்து, அது தவறுதலாக கோல் கம்பத்தில் மோதியது. இதனை செய்தவர் வேறு யாரும் அல்ல மார்கஸ் ரஷ்பேட் என்னும் நட்சத்திர வீரர் தான். ஆனால் உடனே அவரால் தான் பிரித்தானியா தோற்றது என்றும். கறுப்பின மக்கள் விளையாடக் கூடாது என்றும் பல ஆயிரம் வெள்ளை இன மக்கள் தமது சமூக வலையத் தளங்களில் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இதனை அடுத்து, பிரித்தானியா உதைபந்தாட்ட மேனேஜர் இதனை கடுமையாக சாடினார். மேலும் பிரித்தானிய கேப்டன் மார்கஸ்சுக்கு ஆதராவாக களம் இறங்கினார். ஆனால் இன் நிலையில் மேன்செஸ்டரில் ஒரு பெரிய இடத்தில் … மார்கஸ்சின் உருவ படத்தை வரைந்த சிலர்…

அதில் ஆறுதல் வசனங்களை எழுதி ஒட்டி வருகிறார்கள். பரவாயில்லை மார்கஸ் அடுத்த முறை முயற்ச்சி செய்வோம் என்று ஒரு 9 வயது சிறுவன் எழுதியுள்ள கடிதமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை வெள்ளை இன மக்களே மேற்கொண்டு வருகிறார்கள். இன வெறி பேசும் நபர்கள் உண்மையான உதைபந்தாட்ட ஆதரவாளர்கள் அல்ல, என்று பிரித்தானிய கேப்டன் கூறியுள்ளார். மேலும் மார்கஸ்சுக்கு பெரும் ஆதாரவு வெள்ளை இன மக்கள் இடையே பெருகி வருகிறது. இதனை பார்க்கும் போது நாண் கண்ணீர் விடுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Contact Us