கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 44 நோயாளிகள் பலி; பெரும் சோகம்!

ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான மருத்துவமனை டீன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 நோயாளிகள் சிக்கி பலியாகினர். மேலும், 67-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us