தந்தையின் பெயரை காப்பாற்றும் பிள்ளைதான் இந்த நடிகர்; என்ன செய்துள்ளார் பாருங்க!

மறைந்த எச்.வசந்தகுமார் எம்.பி., கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஏராளமான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டார். பல்வேறு பணிகளை துவக்கி வைத்திருந்தார். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து நலத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில் இருந்தது. அவரது எதிர்பாராத மறைவுக்குப் பின் அவரது மகன் விஜய் வசந்த், குமரி நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த விஜய் வசந்த்
தந்தை துவங்கி வைத்த நலத்திட்ட பணிகளை முடிப்பதில் விஜய் வசந்த் ஆர்வமும் அக்கறையும் காட்டி வருகிறார். அதற்கேற்ப இன்று இரண்டு முக்கியமான திட்டங்களை வசந்தகுமார் துவங்கி வைத்தார். குருந்தன்கோடு வாணியங்குடியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு படிப்பகம் மற்றும் திற்பரப்பு பேரூராட்சி கோட்டூர்கோணம் பகுதியில் ஒரு அங்கன்வாடி கட்டட பணிகள் பூர்த்தி செய்து இன்று திறந்துவைக்கப்பட்டது. தனது தந்தை தொடங்கி வைத்த பணிகளை பூர்த்தி செய்து மக்களுக்கு அர்ப்பணிப்பதை ஒரு பாக்கியமாக கருதுவதாக விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு
குழந்தைகள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு
குமரி மாவட்டம் கோட்டூர்கோணம் பகுதி “குழந்தைகள் பாராளுமன்ற” உறுப்பினர்கள் இன்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்பகுதியில் விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற எம்பி, குழந்தைகளின் அழைப்பை ஏற்று அவர்களை சந்திக்க சென்றார். அப்பொழுது அந்த ஊரின் சாலை வசதிகளை மேம்படுத்தவும் குளங்களை தூர் வாரவும் ஆவன செய்யுமாறு எம்பியிடம் குழந்தைகள் கோரிக்கை விடுத்தார்கள். மேலும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் சேவைகளை வெகுவாக பாராட்டி குழந்தைகள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
இது குறித்து டிவிட்டரில் பதிவு செய்த விஜய் வசந்த் அவர்கள் குழந்தைகளின் இந்த முயற்சிகள் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். சிறுவர்கள் இது போன்று சமூக நலனில் அக்கறை காட்ட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அழகுமுத்து கோன் சிலைக்கு மரியாதை
அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 264வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. மறைந்த வீரனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கன்னியாகுமரி  எம்பி விஜய் வசந்த், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அழகுமுத்து கோன் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய் வசந்த்
நாகர்கோவிலில் உள்ள  பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட  திருவுருவப் படத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் யாதவ மகாசபை சார்பில் பார்வதிபுரம் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் யாதவ மகாசபை பொறுப்பாளர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Contact Us