சைக்கிள் ஓடும் முரட்டு சிங்கிள் நடிகை திரிஷா; சாத்தியமா அந்த சைக்கிள் இல்லை!

தென்னிந்திய திரையுலகில் கடந்த 19 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை திரிஷா.

கடைசியாக இவர் பரமபதம் என்ற திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திரிஷா.

இந்நிலையில் திரிஷா சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதை கண்ட ரசிகர்கள் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இருப்பதால் அதை கிண்டல் செய்யும் விதமாக சைக்கிள் புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருப்பதாக கமெண்ட் செய்து வந்தனர்.

ஆனால் திரிஷா “இது என்னுடைய புதிய சைக்கிள். நீங்கள் ஒரு நல்ல மனநிலையில், உங்களால் சிறந்த பயணத்தை மேற்கொள்ள முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

Contact Us