வெள்ளத்தில் மூழ்கிவரும் லண்டன் – பல இடங்களில் வீடுகளின் விலை குறைய இதுவே காரணம் !

லண்டன் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில், பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வழமையாக வீதியில் மட்டும் ஏற்படும் இந்த வெள்ளப் பெருக்கு தற்போது, எல்லை மீறி வீடுகளுக்கு உள்ளேயும் புக ஆரம்பித்துள்ளது. லண்டனில் பல ஆறுகள், வெள்ளப் பெருக்கில் உள்ளது. ஆற்றுக்கு பக்கத்தில் வீடு தேவை, River Side View வீடு தேவை என்று அலைந்து திரிந்து வீடு வாங்கிய நபர்கள், தற்போது தலையில் கை வைக்கும் அளவு நிலமை மோசமாகியுள்ளது. வடிகால் அமைப்பு சீராக இயங்கினாலும். குறித்த வெள்ளத்தை தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறுவது போல, இந்த வெள்ளத்தோடும் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று… (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.)

பிரதமர் கூறுவாரா தெரியவில்லை… ஆனால் இந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் விலை வெகுவாக குறைந்து வருகிறது. காரணம் பல காப்புறுதி நிறுவனங்கள், தாம் வீட்டுக்கு காப்பீடு செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் வீட்டை வாங்கினால் வீட்டு காப்புறுதி என்பது பெரும் சிக்கலான விடையமாக உள்ளது. பொதுவாக கடல்கரைக்கு, அருகாமையில் உள்ள வீடுகளுக்கே காப்புறுதி பெறுவது கஷ்டமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இன் நிலை லண்டனிலும் ஏற்பட்டு வருகிறது.

Contact Us