என்ன…! மீண்டும் இங்கிலாந்தில் லாக்டவுனா…? பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்….!

இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதியிலிருந்து கொரோனா குறித்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் குறைக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று பிரபல நிறுவனத்தின் பத்திரிகை சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ஜூலை 19 ஆம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் உடனடியாக தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட எண்ணாதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா நோய்த்தொற்று முழுமையாக நம் நாட்டில் முடிந்துவிடவில்லை என்றுள்ளார்.

இன்னும் 11 வாரங்களில் கொரோனா தொற்று நிலைமை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதன்பின் இங்கிலாந்தில் மீண்டும் பொது முடக்கம் போடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார்.

Contact Us