இது தான் ‘உலகத்துலையே’ ரொம்ப காஸ்ட்லி…! அய்யோ… ‘விலைய’ கேட்டா ‘மயக்கம்’ வர்ற மாதிரி இருக்கே…! – ‘அதுல’ அப்படி ‘என்ன’ தான் இருக்கு…?

உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பர்கரை நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

most expensive burger in the world created by a Dutch chef.

உலகில் அதிகளவில் உண்ணப்படும் பல்வேறு துரித வகை உணவுகளில் முக்கியமானதாக இருப்பது பீட்சா, பர்கர் போன்றவை.

நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ராபர்ட் ஜான் டெ வின் என்பவர், டெ டால்டன்ஸ் உணவகத்தில் தி கோல்டன் பாய் என்ற பர்கரை உருவாக்கியுள்ளார்.

இது உலகின் விலை உயர்ந்த பர்கராக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 5 ஆயிரம் ஈரோ (இந்திய மதிப்பில் 4.5 லட்சம்).

அதோடு ராபர்ட் ஜான் தயாரிக்கும் இந்த பர்கரில் வழக்கமான பொருட்களுடன், உலகின் விலை உயர்ந்த காஃபி கொட்டையான கோபி லுவாக்கால் செய்யப்பட்ட பார்பெக்கு சாஸ், டாம் பெரிகோன் சாம்பெயினில் தயாரிக்கப்பட்ட பன் போன்றவை பயன்படுத்தப்படுவதோடு தங்க இழை சுருளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுகிறதாம்.

இதன்காரணமாகவே இந்த பர்கர் உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பர்கராக கூறப்படுகிறது.

Contact Us