இனிமேல் எனக்கு பேரன் கிடையாது, ‘பேத்தி’ தான்…! ‘ஃபர்ஸ்ட் என்கிட்ட தான் வந்து விஷயத்தை சொன்னா…’ ‘கேட்ட உடனே எனக்கு…’ – நெகிழ்ச்சி அடைய வைக்கும் சம்பவம்…!

தனது திருநங்கை பேத்திக்கு 87 வயதான பாட்டி அவரின் இயற்கையான மாறுதலுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

grandmother supports her transgender granddaughter

பெரும்பான்மையான மக்கள் இந்த உலகில் ஆண் பெண் என்ற இரு பாலினம் மட்டுமே உள்ளது என்று நினைப்பதுண்டு.

இந்த நிலையில், மாற்று பாலினத்தாரின் வாழ்வு இந்த உலகில் இன்னும் போராட்டங்களாகவே உள்ளது. இந்நிலையில் தன்னுடைய பேரன் தற்போது பேத்தியாக மாறியப்போதும் தன்னுடைய முழு ஆதரவையும், அன்பையும் கொடுத்து நெகிழ்ச்சியூட்டி வருகிறார் மும்பையை சேர்ந்த 87 வயது பாட்டி.

இதுகுறித்து வீடியோ ஒன்றில், ‘எனக்கு வயது 87, எனது பேத்தி காளிக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன். அவள் பிறக்கும் போது ஆணாக பிறந்தாள், ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் அவள் தான் ஒரு பெண்ணாக உணர்வதை என்னிடம் தான் முதலில் தெரிவித்தார்.

அதை முதலில் என் பேத்தியின் வாலியிருந்து கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் எனக்கு உடல் நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டது.

என் நினைவெல்லாம் இனிவரும் காலங்களில் என் காளியை இந்த சமூகம் எப்படி நடத்தும், உறவினர்கள் அவளை எப்படி பேசுவார்கள் என்ற கவலை என் மனதை ஆக்கிரமித்தது.

இதன்காரணமாக பல நாட்கள் நான் அவளுடன் வீட்டுக்குளேயே இருந்தேன். என்னுடைய இந்த செயலால் சில நாட்களுக்கு பிறகு காளி மனதாலும், உடளவிலும் சில பிரச்சனைகளை சந்திப்பதை பார்த்தேன்.

அதன்பின் தான் இனி நான் அவளுக்கு ஆதரவாக இருக்க எண்ணினேன். அதனால் எனது நகைகளை அவளிடம் கொடுத்து அவளை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதை தெரியப்படுத்தினேன்.

அப்போது தான் என் பேத்தியின் முகத்தில் முழு சந்தோசத்தையும், சிரிப்பையும் பார்க்க முடிந்தது. இப்போது என் பேத்தியை உங்களுக்கு அறிமுகம் செய்யும் நேரம் வந்துவிட்டது.

இவள் தான் எனது பேத்தி, அவள் எப்போதும் சந்தோசமாக இருக்க நான் விரும்புகிறேன்’ என முழுநிறைவுடன் வீடியோ முடிந்துள்ளது.

அதோடு காளியும், தனது பாட்டி தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை எவ்வாறு ஆதரித்தார் என்றும் காளி தனது அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 

Contact Us