கமல் கட்சியில் மகேந்திரன் இடத்தில் தற்போது ஒரு பெண்!!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் சமீபத்தில் திமுகவில் சேர்ந்தார். மகேந்திரன் கோவையில் மநீம கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு 36,655 வாக்குகளை பெற்றார். அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் 10,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கார்த்திக் தோற்க மகேந்திரன் வாக்குகளை பிரித்தது ஒரு காரணம்.

இதனால் மநீமவில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட மகேந்திரன் அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.  மக்கள் நீதி மய்யத்தின் கோவை முகமாக இருந்த மகேந்திரன் திமுகவுக்கு சென்றுவிட்டதால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது . அந்த வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .

இந்த நிலையில் , அவருக்கு மாற்றாக பெண் தொழிலதிபரும் , மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான அனுஷா ரவியை களமிறக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேந்திரன் திமுகவுக்கு சென்ற போது பத்மபிரியா உள்ளிட்ட மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பலரையும் அழைத்து சென்று விட்டார் . அப்போது , அனுஷா ரவிக்கும் அழைப்பு விடுத்துள்ளார் . ஆனால் , மகேந்திரனின் அழைப்பை ஏற்க மறுத்த அனுஷா ரவி மநீமவிலேயே தொடர்ந்து இயங்கி வருகிறார் .

Contact Us