இலங்கையில் பெண்களின் நிர்வாண காணொளிகளை இணையத்தில் வௌியிட்ட நபர்கள்!

பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

புறக்கோட்டை மற்றும் இராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்த 26 வயதுடைய இருவரும், கண்டி பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரும், பிலியந்தலை பகுதியை சேர்ந்த 39 வயது நபரும் மற்றும் கம்பஹா பிரதேசத்தில் 31 வயதுடைய நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

31 வயதுடைய நபர் மற்றொரு நபரின் பேஸ்புக் கணக்கில் பிரவேசித்து, கடவுச்சொல்லை மாற்றி, ஆபாச புகைப்படங்களை பதிவேற்றி உள்ளதாக அளிக்கப்பட்ட முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Contact Us