மன்னாரில் வங்காலை – கிறிஸ்தவர்கள் மோதல்; சிலைகளை உடைத்தது விக்டர் சோசையின் ஆட்கள் என்பது அம்பலம்!

மன்னார் மறைமாவட்ட முன்னாள் குருமுதல்வர் விக்டர் சோசை தொடர் மோசடியில் ஈடுபட்டதால் திருச்சபை அவரை மன்னார் மறை மாவட்டத்தால் இருந்து தூக்கி விட்ட ஆத்திரத்தால் வாங்கலையை சேர்ந்த மக்கள் மன்னாரில் உள்ள சிற்றாலயங்களை உடைத்து வருவதாக அங்கிருந்துவரும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்தி இதோ …

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது  இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்கலாக மூன்று சொரூபங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று புதன் கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது குறித்த சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூடு உடைந்து சேதமாகி உள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் ‘சோகோ’ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை அதிகாலை மேலும் மூன்று சிற்றாலங்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Contact Us