எனக்கு நீங்க தான் முக்கியம்!’.. ‘நாட்டையே கண் கலங்க வைத்த 9 வயது சிறுவனின் கடிதம்’!.. நேரலையில் தேம்பி தேம்பி அழுத செய்தி வாசிப்பாளர்கள்!

ஒரு 9 வயது சிறுவனால், தன்னுடைய மழலை மொழி மூலம் ஒரு நாட்டையே கண் கலங்க வைக்க முடியுமா என்றால், ‘ஆம்’ என்று உறுதிபடுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

you will always be hero childs heartbreaking letter rashford

யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால், நாடு முழுக்க கடுமையான விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட மூவரும் கருப்பினத்தவர்கள் ஆவர். எனவே, அவர்களை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், டெக்ஸ்டெர் ரொஷியர் என்ற 9 வயது சிறுவன், தான் ஹீரோவாக நினைக்கும் மார்கஸ் ரஷ்போர்ட்டிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

இது பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த சிறுவனின் கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல பத்திரிகையாளர் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.

அந்த கடிதத்தில் சிறுவன் எழுதியிருப்பதாவது, “டியர் மார்கஸ் ரஷ்போர்ட், கடந்த ஆண்டில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து என்னை கவர்ந்தீர்கள். நேற்று, அனைத்து விமர்சனங்களையும் அமைதியாக எதிர்கொண்டு மீண்டும் என்னை நீங்கள் பிரமிப்படையச் செய்துள்ளீர்கள்.

உங்களை எண்ணி பெருமை அடைகிறேன். மோசமான சம்பவங்களை புறக்கணியுங்கள். நீங்கள் என்றும் எங்களின் நாயகன் தான்” என்று சிறுவன் எழுதி உள்ளார். இங்கிலாந்து நாட்டின் முகம் இச்சிறுவனின் கடிதத்தில் வெளிப்பட்டதாக செய்தி வாசிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கடிதத்தை வாசித்த இரு ஊடகவியலாளர்களும் கண் கலங்கியதுடன், “இது தான் உண்மையில் இங்கிலாந்தின் முகம்” என சிறுவனின் கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

9 வயது சிறுவன் எழுதிய கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல ஊடகவியலாளர் சுசண்ணா ரெய்டு கண்ணீரை அடக்க முடியாமல் நேரலையில் தேம்பியுள்ளார்.

அவருடன் அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இன்னொரு ஊடகவியலாளரான ரன்வீர் சிங் என்பரும் கண்கலங்கியுள்ளார்.

Contact Us