நடிகர் விஜய் வரி விலக்கு கேட்டது சரியா? தவறா?’.. காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ‘வைரல்’ கருத்து!

வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

karti chidambaram supports actor vijay rolls royce entry tax

கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. அவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு” எனக் கூறியுள்ளார்.

Contact Us