மு.க.ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கு’?.. கொரோனா நிவாரண நிதி வழங்கிய பிறகு… நடிகர் வடிவேலு சொன்ன ‘அந்த’ வார்த்தை!.. செம்ம வைரல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார் நடிகர் வடிவேலு.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார்.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளேன். ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “தமிழக முதல்வரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார்.

தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார். கொரோனா தடுப்பூசியை செலுத்தி மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினையும், திமுக அரசையும் வெகுவாக பாராட்டியுள்ளார் வடிவேலு.

Contact Us