13 வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் – தந்தையுடன் 05 பேர் கைது

 

நாவலப்பிட்டி பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஏனைய ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கைதுசெய்யப்பட்டவர்களில் குறித்த சம்பவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் ஒருவரும் உள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் ஐந்து பேரும் நாவலப்பிட்டி நீதிமன்றில் நேற்று (14) முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்துடன் மேலும் ஆறு பேருக்கு தொடர்புள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

Contact Us