பெண் மீது ஆசிட் வீச்சு நான்கு பேருக்கு நடந்தது ஏன்னா?

 

சிக்கமகளூரு-பெண் மீது ஆசிட் வீசிய நால்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிக்கமகளூரு சிருங்கேரியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தவர் சுமனா. வீட்டின் அருகில் நடந்து செல்லும் போது, இவர் மீது, 2015 ஏப்ரல் 18ல், ஆசிட் வீசப்பட்டது. திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், ஆசிட் வீசப்பட்டதாக கூறப்பட்டது.விசாரணை நடத்திய சிருங்கேரி போலீசார், கணேஷ், வினோத், முகமது கபீர், அப்துல் மஜித் ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் மீது சிக்கமகளூரு இரண்டாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில் நால்வரின் குற்றம் உறுதியானதால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து, 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மஞ்சுநாத் சங்கேஷி, நேற்று தீர்ப்பளித்தார்.

Contact Us