உலகம் அழியப் போகிறது ஜேர்மனில் வெள்ளதால் 81 பேர் சாவு மேலும் 1,300 பேரை காணவில்லை !

ஐரோப்பிய நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஜேர்மன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே இதுவரை வெள்ளத்தால் 81 பேர் இறந்துள்ளதாகவும். ஒட்டு மொத்தமாக எல்லா ஐரோப்பிய நாடுகளையும் சேர்த்து 1,300 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்களை வெள்ளம் அடித்துச் சென்றிருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா தொற்று ஒரு புறம் இருக்க, தற்போது ஐரோப்பாவை கடும் மழை தாக்க ஆரம்பித்துள்ளது. இப்படி 600 வருடங்களில் நடந்தது இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதற்கு காரணம் பருவ நிலை மாற்றம் என்றும். பூமி வெப்பமடைவதாகவும் கூறியுள்ளார்கள் விஞ்ஞானிகள்… மேலும்…

பிரித்தானியாவை பொறுத்தவரை அடுத்த பல நாடகளுக்கு நல்ல வெப்ப நிலை நிலவும் என்றும். கோடை காலம் மீண்டும் திரும்பும் என்றும் கூறப்படுகிறது. எனவே பிரித்தானிய அதிலும் லண்டன் வாழ் தமிழர்கள் நல்ல கொண்டாட்டத்தில் உள்ளார்கள் என்று தெரிகிறது. உள்ளூரில் எங்கே எங்கே செல்லலாம் என்று பலர் திட்டம் தீட்டி வருகிறார்கள். (Source : Germany’s ‘flood of death’ kills at least 81 – but total could rise massively with 1,300 people still missing following European weather disaster)

Contact Us