இனி பிரிட்டன் வரும் அகதிகளை ஆபிரிக்கா அனுப்பி காம்பில் போட பிரீத்தி பட்டேல் ரகசிய திட்டம்

பிரித்தானியா வரும் அகதிகளை, ஆபிரிக்க நாடான ரிவாண்டாவுக்கு அனுப்பி. அங்கே உள்ள முகாம் ஒன்றில் முதலில் அடைத்து. பின்னரே அவர்களது வழக்கை விசாரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவர்களுக்கு விசாவை வழங்கி பிரிட்டனுக்குள் எடுப்பது என்ற ஒரு சட்ட வரைபை, பிரித்தானிய உள்துறை அமைச்சர் இயற்றி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. இதேபோன்ற ஒரு நடவடிக்கையை, ஐரோப்பிய நாடான டென்மார் கடைப்பிடிக்க உள்ளதாகவும். அந்த நடைமுறை டென்மார்கில் அமுலாகும் என்றும் கூறப்படுகிறது. அது போன்ற ஒரு இறுக்கமான நடைமுறையை பிரிட்டனும் கொண்டுவர உள்ளது. இது மிகவும் கடுமையாக இருக்கும் என்று…

கூறப்படுகிறது. பொதுவாக அவுஸ்திரேலியா தனது நாட்டுக்குள் வரும் அகதிகளை முதலில் கிருஸ்மஸ் தீவு என்ற தனி தீவு ஒன்றுக்கு கொண்டு சென்று அங்கே தங்க வைத்து தான் விசாரிக்கிறார்கள். அந்த தீவில் 7 நாட்கள் இருந்தாலே மண்டை தட்டி விடும். ஏன்டா வந்தோம் என்ற நிலை உருவாகி விடும். தமது சொந்த நாட்டில் வாழ முடியாமல் குடி பெயரும் மக்களை மேலும் அவஸ்தை படுத்த இது போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது சில நாடுகள். (Source: Kindness… or madness? Could Denmark’s controversial new scheme to send Europe’s asylum seekers to camps in AFRICA stop the evil traffickers ? )

Contact Us