அடுத்தடுத்து காணாமல் போன விமானங்கள்…. கட்டுப்பாட்டு அறையுடன் துண்டிப்பு…. பரபரப்பான தகவல்…!!

ரஷ்ய நாட்டில் உள்ள பெட்ரோவ்பாவ்லோவ்ஸ்க் – காம்சாட்ஸ்கி நகரில் ஆன்டனோவ் ஆன்-26 ரக விமானம் ஒன்று கடந்த 6 ஆம் தேதி பலானா நகரை நோக்கி புறப்பட்டுள்ளது. மேலும் பலானா விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பு ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பியுள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தை தீவிரமாக தேடி  வந்த நிலையில் அது விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டாவது விமானம் ஒன்று மாயமாகி உள்ளது.

இது சைபீரியாவில் இருந்து 13 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போது தீடிரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானம் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விமானங்கள் இப்படி தொடர்ச்சியாக காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us