இளம் பெண்ணின் ஆடைகளை உருவி கணவனை தோளில் சுமக்க வைத்த கொடுமை!

குஜராத்தின் தகோத் மாவட்டத்தில் உள்ள தன்பூர் தாலுகாவின் கஜூரி பழங்குடியினர் கிராமத்தில் 23 வயது பெண் சமீபத்தில் தனது கணவரைவிட்டு வேறொரு ஆணுடன் ஓடி விட்டார். அவரது கணவரும் மற்ற கிராமவாசிகளும் அவர்களைக் கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.

ஜூலை 6 ஆம் தேதி, அந்த பெண்ணுக்கு கிராமத்தில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அந்த பெண்ணின் ஆடைகளை உருவி அவரை அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்று உள்ளனர். அது மட்டுமின்றி அதே நிலையில் அந்த பெண் கணவரை சுமந்து செல்லும் தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவர், மாமனார், உள்பட 18 பேரை கைது செய்து உள்ளனர்.

Contact Us