தமிழர் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாற்று கடற்கரையில் சடலம் ஒன்று கிண்ணியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தெலைவில் மீனவர்களின் கட்டுவலையில் இச்சடலம் ஒதுங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், கருப்பு நிற நீள காற்சட்டையும், சிகப்பு நிற சேர்ட்டும், கபில நிற இடுப்புப் பட்டியும் அணிந்து இருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வில் வெளியைச் சேர்ந்த முகம்மட் இஸ்மாயில் – றிஸ்வி வயது 42 எனஅடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us