அத்தையைக் கொன்ற இளைஞர்.. இளைஞரைக் கொன்ற மாமா.. இரட்டைக் கொலையால் கிராமமே அதிர்ச்சி!

ஜார்க்கண்ட மாநிலத்தில் நடந்த இரண்டை கொலை சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ராஜ்பால் முண்டா. இளைஞரின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதே கிராமத்தில் ராஜ்பால் முண்டாவின் அத்தை பின்சாரி தேவி ( வயது 55) வசித்து வருகிறார். தன் குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டதற்கு பின்சாரி தான் காரணம். அவர்தான் தன் குடும்பத்துக்கு சூனியம் வைத்து விட்டார் என ராஜ்பால் நம்பியுள்ளார். பின்சாரியை கொன்றால்தான் தன் குடும்பத்தினர் உடல்நலம் பெறுவார்கள் என எண்ணிய இளைஞன் தன் அத்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். அத்தையின் கணவர் மாக்தேவ் முண்டா அவரது பண்ணைக்கு சென்ற சமயம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த பின்சாரி தேவியை பார்த்து நீ ஒரு சூனியக்காரி எனக் கூறீ அவரை கோடாரியால் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பின்சாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்சாரியின் அலறல் சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து மனைவி கொல்லப்பட்ட தகவல் கிராம மக்கள் மூலம் மாக்தேவ் முண்டாவுக்கு தெரியவந்தது. வீட்டிற்கு வந்த மனைவி கொல்லப்பட்டது தெரிந்து ஆத்திரமடைந்தார். ராஜ்பாலை வீட்டிற்கு அழைத்த மாக்தேவ் ஏன் கொலை செய்தாய் என்று கேட்டுள்ளார். அவள் ஒரு சூனியக்காரி. அவளால் தான் என் குடும்பம் இப்படி ஆனது. அதனால்தான் கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார். இதைக்கேட்டு மேலும் ஆத்திரமடைந்தவர் ஒரு நிமிட மவுனத்துக்கு பிறகு வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ராஜ்பாலை தலையில் வெட்டியுள்ளார்.

தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து ராஜ்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குரும்கர் போலீஸாருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கிராமத்துக்கு விரைந்த போலீஸார் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் மக்தேவ் முண்டாவை கைது செய்தனர்.

Contact Us