இரண்டு கட்டிடங்களுக்கு இடையே நிர்வாண நிலையில் பெண்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இரண்டு வணிகக் கட்டிடங்களுக்கு இடையில் 8 அங்குல இடைவெளியில் ஒரு பெண் சிக்கிக்கொண்டார். அதனை கடையின் உரிமையாளர் அறிந்தபோது, அந்தப் பெண் பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்காவின், கலிபோர்னியாயில் உள்ள சாண்டா அனாவில் நடந்த சம்பவம் இது. அந்தப் பெண் எப்படி அங்கு சிக்கிக்கொண்டார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒரு ஆட்டோ பாடி ஷாப் மற்றும் கார் ஸ்டீரியோ விற்பனைக் கடையின் சுவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட போது, அந்த பெண் நிர்வாணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அருகிலுள்ள தொழிலாளர்கள், உதவி கேட்டு அழும் ஒரு பெண்ணின் குரலைக் கேட்டதும், சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடியாமல் போனது. உடனே, அவர்கள் சாண்டா அனா காவல் துறை அதிகாரிகளை அந்த இடத்திற்கு அழைத்தனர்.

ஒரு கடையின் உரிமையாளர், தன்னுடைய கடைக்கு பின்னால், , இடைவிடாமல் ஒரு பெண்மணி அலறுவதைக் கேட்டதாகக் கூறினார். உதவிக்காக அழும் குரலைக் கேட்டு, கடை உரிமையாளர் உள்ளே வந்த போலீஸ்காரர்களை அழைத்து கூரையில் ஏறி இரண்டு சுவர்களுக்கு இடையில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தார்.

கட்டிடங்களின் இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டிருந்த அந்தப் பெண் மிகுந்த வலியால் துடித்துக் கொண்டிருந்ததாகவும், அவர் தலைகீழாக இருந்ததாகவும்தெரிவிக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணைக் கண்டவுடன், மீட்புக் குழுவை சம்பவ இடத்திற்கு உடனே வரவழைத்ததாக கே.டி.எல்.ஏ அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆரஞ்சு கவுண்டி தீயணைப்பு ஆணையம் (OCFA) பகிர்ந்த ஒரு ட்வீட், சிக்கிக்கொண்ட அந்த பெண்ணை, அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காக தீயணைப்பு வீரர்கள் குழு எவ்வாறு பணியாற்றியது என்பதைக் காட்டுகிறது. தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்ணை நேரடியாக அணுக முடியவில்லை. எனவே, அருகிலுள்ள சுவரில் ஒரு துளை ஏற்படுத்தி, அதன் வழியே கேமராவை நுழைத்து, சுவரை கொஞ்சம் உடைத்து, அதன் வழியே அப்பெண்ணை மீட்க முடியுமா என்று அவர்கள் ஒரு திட்டத்தை வகுத்தனர் என்று அந்த டிவீட்டில் விளக்கியுள்ளார்.

 

OCFA இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இந்த மீட்புப் பணியின் தொடர்ச்சியான வீடியோக்களைப் பகிர்ந்தது. இது மீட்பு நடவடிக்கை எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதைப் பற்றிய விவரத்தை நெட்டிசன்களுக்கு புரிய வைத்தது. தீயணைப்பு வீரர்கள் குழு, சுவரில் துல்லியமான அளவீடுகள் மற்றும் அடையாளங்களை ஏற்படுத்தி, சுவர் வழியாக துளைத்து, சிக்கியிருந்த பெண்ணை மீட்டது. இந்த மீட்பு நடவடிக்கை முழுவதும், மற்றொரு தீயணைப்பு வீரர்கள் குழு, அந்தப் பெண்ணின் மீது கவனமாக இருந்தனர். அது மட்டுமின்றி, ஒரு பெரிய விசிறி மூலம் அவர் சிக்கியிருந்த இடத்தில் காற்றோட்டம் ஏற்படுத்தினர்.

மீட்புப் பணி வெற்றியடைந்து, அந்தப் பெண் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டு, பேராமெடிக்ஸ் குழுவினர் அவருக்கு தேவையான சிகிச்சை அளித்தனர்.

Contact Us