கொலைகாரனுக்கு பதவிகொடுத்து அழகு பார்த்த கோத்தா!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் கடந்த மாதம் இவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மன்னிப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் துமிந்த சில்வாவை தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் தலைவராக நியமித்து அனுப்பிய கடிதத்தை தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டது.

Gallery

Contact Us